1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:16 IST)

வெள்ளிக்கிழமை அதுவுமா....விஜயகாந்த் வீட்டில் திருடுபோன பசு மாடுகள்..

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டில் இருந்து 2 பசுமாடுகள் திருடு போயுள்ளதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

 
சென்னை விருகம்பாக்கத்தில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  மேலும் அவருக்கு காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்று உள்ளது.அந்த வீட்டின் முன்பு கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளை நேற்றிரவு மர்ம நபர்கள் திருடி விட்டார்கள். மாடுகள் காணாமல் போன விவரம் விஜயகாந்த்க்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.  இதையடுத்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் மாடுகள் திருடப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்கள்.
 
வெள்ளிக்கிழமை அதிகாலையில் புதுவீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த பசு மாடுகள் திருடுபோனதால் விஜயகாந்த் வீட்டில் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.