ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (09:27 IST)

விஜயகாந்த் வீட்டில் வளர்ந்த பசுமாடுகள் திடீர் மாயம்

தேமுதிக பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்த் வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகள் திடீரென மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை காட்டுப்பாக்கத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் புதிதாக ஒரு வீட்டை கட்டி வருகிறார். இந்த வீட்டில் இருந்த 2 பசுமாடுகள் திடீரென மாயமாகியுள்ளது. இந்த படுமாடுகளை யாரேனும் திருடி கொண்டு சென்று விட்டார்களா? அல்லது கட்டு அவிழ்ந்ததால் பசுமாடுகள் தானாகவே வெளியே சென்று விட்டதா? என்பது தெரியவில்லை

இந்த நிலையில் விஜயகாந்த் வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகள் மாயம் என பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.