1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (15:29 IST)

நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!

சினிமா துணை நடிகர் மகாகாந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல காலமாக ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் பிரபலமான ஹீரோவாக உருவானவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதுதவிர மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தமிழில் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது சென்னை நீதிமன்றத்தில் மகா காந்தி என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத அவர் இழிவுப்படுத்தி தவறான வார்த்தைகளால் பேசியதாகவும், அதனால் அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்ற சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 4ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.