திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (20:03 IST)

சினிமா 'ஸ்டண்ட் மாஸ்டர்' கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன்

தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

சினிமா முன்னணி  நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர்  கனல் கண்ணன். இவர், சமீபத்தில் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய  வீடியோவை வெளியிட்டதாக புகார் அளிப்பட்டதன் பேரில்,  கடந்த 10 ஆம் தேதி  கனல் கண்ணனை  நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

 சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவதும், மத பிரிவினையை உண்டாக்குவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு இன்று குற்றவியல்  நடுவர் நீதிமன்றம். ஜாமீன் வழங்கியுள்ளது. அதில்,  நாகர்கோவில் சைபர் கிரைம் அலுவலகத்தில் 30 நாட்கள் கையெழுத்திட வேண்டுமென்று   நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது