1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (17:50 IST)

கொரோனா தொற்று குறைந்துள்ளது - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினசரி கொரொனா பாதிப்பு 31 வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. மேலும் இன்று  தமிழகத்தில் மேலும் 7,427 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருவோரின் எண்ணிக்கை 61 ஆயிரமாக குறைந்துள்ளது. மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  553 மாவட்டங்களில் கொரொனா தொற்று விகிதம் 5% க்கும் கிழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது :

கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது சாராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளோவோர் எண்ணிக்கை 29 % ஆகக் குறைந்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.