செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (14:06 IST)

தனுஷ் நடிக்கும் 3-வது இந்திப்படம் - டீசருடன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை,  திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார். 
 
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் , பட்டாஸ் என இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அசுரன் படத்தில் சிவசாமியாக அசுரத்தனமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.  அதையடுத்து தற்போது ராஞ்சனா, சமிதாப் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மற்றொரு இந்தி படத்தில் மூன்றாவது கம்மியாகியிருக்கிறார். 
 
தனுஷின் முதல் இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இப்படத்தை இயக்குகிறார்.  ‘Atrangi Re’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகர் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம்  மார்ச் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. சற்றுமுன் இப்படத்தின் டீசருடன் நடிகர்கள் லிஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.