வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (15:56 IST)

இறுதிக் கட்டத்தை நெருங்கிய தனுஷின் பாலிவுட் திரைப்படம்!

நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ள அத்ராங்கி டே படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மதுரையில் நடைபெற்றது. அதையடுத்து இப்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. இம்மாத இறுதி வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிகிறது.