திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (22:27 IST)

பிரபல நடிகை மற்றும் குடும்பத்தினருக்கு மீண்டும் கொரோனா

இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் 3 வதுஅலை பரவும் வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகை நதியாவின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போட்ட பிறகும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி நடிகையாக இருந்தவர் நதியா. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்ததேனி நடிக்கும் ஒரு ஒரு தெலுங்குப் படத்தில், த்ரிஷ்யம்2 கன்னடப் படத்திலும் நதியா நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நதியாவிக்கு சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த நிலையில், மும்பை சென்றுவிட்டு அவர் திரும்பியபின் அவருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்படது.

பின் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. குறிப்பாக அவரது அம்மா, அப்பா, வீட்டில் பணி செய்யும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.