ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:11 IST)

'குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கும் முதல் படம்: இயக்குனர் அறிவிப்பு!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பெற்ற அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. குறிப்பாக இளம்பெண்கள் அவர் மீது வெறித்தனமான அன்பை செலுத்தி வந்தனர் 
 
இந்த நிலையில் அஸ்வின் நடிக்கும் முதல் படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அஸ்வின் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஹரிஹரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அஸ்வினுடன் ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் 'குக் வித் கோமாளி பிரபலமான புகழ் காமெடி வேடத்தில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்.