சக நடிகரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிம்பு...வைரல் புகைப்படம்

simbhu
Sinoj| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (18:37 IST)

சுப்பிரமணியபுரம் போன்ற ஹிட் படங்களில் நடித்த நடிகர் ஜெய் தனது 38 வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். அவருக்கு நடிகர் சிம்பு சர்ப்பிரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த பகவதி
படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, சென்னை-28 படத்தில்ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ஜெய்.

இவர் தேர்தல் நாளான நேற்று 38 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக் கூறினர். இந்நிலையில் நடிகர் ஜெய் எதிர்பாராத வகையில் நடிகர் ஜெய்யின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று அவருக்கு கேக் ஊட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

இதுகுறித்த நடிகர் ஜெய் கூறியதாவது: எனது பிறந்தநாளுக்கு நேரில் வந்து வாழ்த்துக் கூறி சிறப்பான நாளாக்கி என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய சிம்புக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :