புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:35 IST)

அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து பாச மழையில் நனையும் புகழ்!

விஜய் தொலைக்காட்சி பல திறமையுள்ள நபர்களை வளர்த்துவிட்டு பெருமை சேர்த்திருக்கிறது. சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தை சேர்ந்த கலக்கபோது யாரு தீனா , பாலா , நிஷா போன்ற பல திறமைசாலிகளை பிரபலமாகியுள்ளது. 
 
அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி TRP'யில் உச்சத்தை தொட்ட குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் புகழ். இவர் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். 
 
அதையடுத்து தற்ப்போது வெளியாகிக்கொண்டிருக்கும்  குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் ஷகிலாவுடன் சேர்ந்து செம Fun செய்து வருகிறார். ஷிவானியுடன் தங்கை பாசம் பொழிந்து பாசத்தை வெளிப்படுத்துவார். இந்நிலையில் தற்ப்போது முதன்முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் பாச மழையில் நனைந்து வருகிறார். மிகவும் எளிமையாக இருக்கும் புகழின் அம்மாவை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.