இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் படக் காட்சிகள்… படக்குழு அதிர்ச்சி!
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகள் இப்போது திருட்டு தனமாக இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளன. அதில் சாய்பல்லவி ஒரு குழந்தையோடு இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் எப்படி யாரால் கசியவிடப்பட்டன என்பது தெரியவில்லை. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.