வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (12:11 IST)

புதுவை முதல்வர் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்து!

விஷன் சினிமாஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து சீனு ராமசாமி  இயக்கத்தில்
கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் இம்மாதம் இருபதாம் தேதி வெளிவருகிறது 
 
இதில் ஏகன், யோகிபாபு,
சாகாய பிரிகிடா,லியோ சிவக்குமார், சத்யா தேவி
புலிக்குட்டி தினேஷ் 
இயக்குனர் நவீன் ஆகியோர் நடித்து உள்ளனர் 
 
கோழி பண்ணை செல்லதுரை  அமெரிக்காவில் நடைபெறும்  சர்வதேச திரைப்பட விழாவில், வேர்ல்ட் ப்ரீமியர் அந்தஸ்தில் இத்திரைப்படம்  வரும் 18ஆம் தேதி இரவு வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை  பெற்றுள்ளது. 
 
இதை முத்தமிழ் கலைச்சங்கமம், புதுவையின் மாபெரும் தமிழ் அறிஞர்களின் ஒருவரான
தமிழமல்லான் முன்னிலையில் புதுச்சேரி முதல்வருக்கு முன்னோட்டத்தை இயக்குனர் சீனு ராமசாமியின் சார்பில் 
தமிழ் கலைச்சங்கமத்தின் தலைவர் ஆரா 
தனது மடி கணியில் திரையிட்டார்.
 
புதுவை முதல்வர் 
என். ரங்கசாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்து தன் வாழ்த்துகளை இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுக்கு தெரிவித்தார்.