திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (14:34 IST)

பாலிவுட் செல்லும் இசையமைப்பாளர் அம்ரீஷ்!

தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இளம் இசையமைப்பாளர் அம்ரீஷ். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் - 2’, ‘சத்ரு’, ‘கர்ஜனை’ உட்பட எராளமான படங்களுக்கு இசையமைத்தவர் அம்ரீஷ். 
 
சமீபத்தில் இவர் த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் பாலிவுட் ஸ்டார் மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘நாகமதி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளார். 
 
ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து பாலிவுட்டுக்கு போகும் தமிழ் இசையமைப்பாளர்கள் வரிசையில் அம்ரீஷும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இன்று ‘நாகமதி’ படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் வெகு சிறப்பாக ஆரம்பமானது.