சூப்பர் ஸ்டார் பிறந்த்நாள் காமன் டிபி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் காமன் டிபி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனவர் அவரது ரசிகர்கள்.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படம் ஒன்றை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்க இருப்பதாக சமீபத்தில் மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் காலை 11 மணிக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபிஐ ரிலீஸ் செய்யவுள்ளனர்.