வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (10:42 IST)

பில்லா 2, கோலமாவு கோகிலா படங்களில் நடித்த காமெடி நடிகர் காலமானார்! – சீனுராமசாமி இரங்கல்!

தமிழ் சினிமாவில் பில்லா 2, கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் உடல்நலக்குறைவால் காலமான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, ரேணிகுண்டா, கோலமாவு கோகிலா, பில்லா 2 என பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். துணை கதாப்பாத்திரங்களே ஏற்று நடித்திருந்தாலும் அதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தீப்பெட்டி கணேசன்.

மதுரையை சேர்ந்த தீப்பெட்டி கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக இயக்குனர் சீனுராமசாமி வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.