ஷாலுன்னு பேரு வச்சுகிட்டு ஷால் போடாம இருக்க கூடாது - கவர்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Papiksha Joseph| Last Updated: திங்கள், 22 மார்ச் 2021 (10:27 IST)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக்பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால், தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும், முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார். அந்தவகையில் தற்போது குட்டை பாவாடை , டைட்டான டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி கிளாமரில் கிறுகிறுக்க வைத்துள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :