வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (15:04 IST)

சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி... ரசிகர்கள் வாழ்த்து...!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
கோலமாவு கோகிலா, டாக்டர், கே.ஜி. டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம், காரி, கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
 
இவர் சீரியல் நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
நடிகை சங்கீதா, பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva