1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:19 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா மீண்டும் வர ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று சக்தி வெளியேறிய பின்னர் வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 7ஆக குறைந்தது. இன்னும் 50 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்காக கண்டிப்பாக கூடுதல் நபர்களை பிக்பாஸ்  வீட்டில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஓவியாவை வைத்து தான் பிக்பாஸ் செம ஹிட். அதன் டிஆர்பி சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஆனால், தற்போது அவர்  மன அழுத்தம் காரணமாக அதிலிருந்து விலகினார். இந்நிலையில் ஓவியா இல்லாமல் பிக்பாஸ் டிஆர்பி குறைந்துவிட்டது. மேலும் ஓவியா ஆர்மிகாரர்கள் பிக்பாஸ் பார்ப்பதை தவித்து வருகின்றனர்.
 
இதனால் பிக்பாஸ் முன்னணி நடிகைகளை பிக்பாஸிற்கு வர முயற்சி செய்து வருகிறது. ஆனால், ஓவியா அளவிற்கு ரசிகர்கள் வேறு யாரையும் விரும்புவார்களா? என்பது சந்தேகம்தான். அதனால், ஓவியாவிடமே மீண்டும் வர தொலைக்காட்சி கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் வீதம் சம்பளமாக தருவதாகவும் பேசி வருவதாகவும் செய்திகள்  வெளியாகியுள்ளது.