செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (18:22 IST)

மூத்த பாடகரை இல்லம் தேடி சென்று சந்தித்த விக்ரம்!

நடிகர் விக்ரம் மூத்த பாடகியான பி சுசீலாவின் மிகப்பெரிய ரசிகர். இந்நிலையில் திடீர் விசிட்டாக அவர் சுசீலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இது சம்மந்தமாக பி சுசிலாவின் முகநூல் பக்கத்தில் வெளியான புகைப்படமும் பதிவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் ‘அக்டோபர் மாதம் ஒரு நாள் சுஷீலாம்மா வீட்டிற்கு ஒரு போன் வந்தது . நடிகர் விக்ரம் அவர்களின் மேனேஜர் பேசினார். விக்ரம் அம்மாவின் பெரிய விசிறி என்றும் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அடுத்த நாள் மாலை வரலாம் என்று அம்மா கூறினார்கள். அம்மாவை பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம், பயம் கலந்த மரியாதை ஒரு பக்கம் சிறிது நேரம் கனவுலகில் இருந்தார் என்றால் மிகையாகாது . அம்மா அத்தனை சகஜமாக பழகுவார் என்று எதிர் பார்க்கவில்லை , அவர்களின் பாடல்கள் போலவே அவர்களின் பேச்சும் அத்தனை இனிமையாக இருக்கிறதே என்று வியந்தார்.

அம்மாவிடம் பல பாடல்கள் பற்றி பேசினார். அம்மா சில பாடல்கள் பாட அவரும் உடன் பாடினார். இன்றைய முன்னணி கதாநாயகர் விக்ரம் இத்தனை பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அத்தனை அடக்கமாக பழகியது ஆச்சர்யபடும் வகையில் இருந்தது. மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. பத்து நிமிடம் அம்மாவை பார்த்து விட்டு போகலாமென வந்தவர் 2 மணிநேரம் பேசிகக்கொண்டிருந்து விட்டு மனமில்லாமல் அவசர வேலையாய் கிளம்பி சென்றார். என் வாழ்க்கை கனவு நனவானது என்றும் அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி என்றும் கூறி விட்டு சென்றார். அம்மாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அடிக்கடி வருகிறேன் என்றும் கூறிவிட்டு சென்றார். நல்ல ஒரு மாலை பொழுதை எங்களுக்கு அளித்த விக்ரம் அவர்களுக்கு நன்றி. இத்தனை உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு முன்னணி நடிகர், இவ்வளவு எளிமையாக இருப்பது அபூர்வம். நன்றி விக்ரம் சார் !!’ எனக் கூறப்பட்டுள்ளது.