1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:43 IST)

கோப்ரா படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி!

விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருக்கும் திரைப்படம் கோப்ரா.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் மே இறுதி அல்லது ஜூன் மாதத்தில் கோப்ரா ரிலிஸ் ஆக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ஏப்ரல் 22 ஆம் தேதி கோப்ரா படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை தற்போது கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.