ரன்வீர்சிங் போட்டுக்க துணி குடுங்க..! – மத்திய பிரதேசத்தில் நூதன போராட்டம்!
சமீபத்தில் தனது நிர்வாண புகைப்படத்தை நடிகர் ரன்வீர் சிங் பதிவிட்டது சர்ச்சையான நிலையில், அவருக்காக துணி சேகரிக்கும் போராட்டத்தில் சிலர் இறங்கியுள்ளனர்.
பிரபல இந்தி நடிகரான ரன்வீர் சிங் அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட்டுகளை நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த சில காலம் முன்னதாக பெண்களை போன்ற உடைகளை அணிந்து ரன்விர் சிங் நடத்திய போட்டோஷூட் பல ஆட்சேபணைகளை ஏற்படுத்தியது.
தற்போது துணியே இல்லாமல் கொடுத்த போட்டோஷூட் போஸ் காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார் ரன்வீர் சிங். அவரது நிர்வாண புகைப்படம் குறித்து பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக மத்திய பிரதேசம் இந்தூரில் நூதனமான போராட்டத்தை சிலர் நடத்தியுள்ளனர்.
துணியில்லாமல் சிரமப்படும் ரன்வீர் சிங்கிற்காக துணி கொடுத்து உதவுமாறு பெட்டி ஒன்றை செய்து அதில் துணிகளை சேகரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.