திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:27 IST)

சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலருக்கு வெகுமதி!

நடிகர் சல்மான் கானை விமான நிலைய சோதனையில் தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா செல்ல மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் வழக்கமான சோதனைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் நேராக உள்ளே செல்ல அவரை தடுத்து நிறுத்திய சி ஐ எஸ் எஃப் ஏ எஸ் ஐ சோம்நாத் மொஹந்தி தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினார். இது சம்மந்தமாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இது சம்மந்தமாக இப்போது சி எஸ் அஃப் ஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘சம்மந்தப்பட்ட வீரருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.