வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (06:11 IST)

அம்மா எப்ப வருவாங்க: கதறி அழும் ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென மரணம் அடைந்த நிலையில் மும்பைக்கு அவரது உடல் இன்று கொண்டு வரப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் தனது முதல் படத்தின் படப்பிடிப்பு காரணமாக ஸ்ரீதேவியுடன் துபாய் திருமணத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேட்டதில் இருந்து ஜான்வி கபூர் கதறி அழுது கொண்டிருப்பதாகவும், அம்மா எப்ப வருவாங்க என்பதையே அவர் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

ஜான்வி கபூர் தற்போது அவருடைய சித்தப்பா அனில்கபூர் வீட்டில் தங்கியுள்ளார். ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர்கள், போனிகபூரில் முதல் மனைவியின் மகன் அர்ஜூன்கபூர் உள்ளிட்டோர் அனில்கபூர் இல்லத்திற்கு சென்று ஜான்விக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஜான்வி கபூரை சமாதானப்படுத்த அவருடைய நெருங்கிய நண்பர்கள் அனில்கபூர் வீட்டிலேயே தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் பிரபலங்களும், ரஜினி, கமல் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களும் அனில்கபூரிடம் நேரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.