ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (17:05 IST)

ஃபேண்டஸியில் மாஸ் காட்ட தயாராகும் சிரஞ்சீவி!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV  கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட  மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் - மெகா156 #Mega156 படத்தின் படப்பிடிப்பு பணிகள் இனிதே துவங்கியது.


முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸின் கீழ் பிம்பிசாரா புகழ் இயக்குநர் வசிஷ்டாவுடன்  மெகாஸ்டார் சிரஞ்சீவி இணையும் மெகா ஃபேன்டஸி சாகச திரைப்படம் #Mega156 திரைப்படம், தசரா விழாவன்று பெரும் கொண்டாட்டமாக துவங்கியது. இந்நிலையில் இன்று, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின்  படப்பிடிப்பை, படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

படப்பிடிப்பில் கிளாப் போர்டை டைரக்டர் மாருதி  அவர்கள் அடித்து துவக்கி வைக்க,   படக்குழுவினர் படத்தின் 9 வது காட்சியை படமாக்கினர். புகைப்படத்தின் பின்னணியில் அடர்ந்த காட்டை நாம் காணலாம். மேலும் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இணைந்துள்ளார்.

அறிவிப்பு போஸ்டரே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. பின்னர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட மற்ற இரண்டு போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை மேலும் அதிகரித்தன. இப்படம் பார்வையாளர்களை பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு  அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.
 
Edited By: Sugapriya Prakash