1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (16:11 IST)

விஜய் பட தயாரிப்பாளரை கிண்டலடித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி....''போலோ ஷங்கர்'' பட புரோமோஷனில் கலகல

Chiranjeevi-bholo Shankar
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம்  போலா ஷங்கர். இப்படத்தில் அவருடன் இணைந்து தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

ஆச்சர்யா படத்திற்குப் பின் சிரஞ்சீவி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை மெகர் ரமேஸ் இயக்கியுள்ளார். ஆதி  நாராயணா,. சிவா, திருப்பதி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

இப்படம் அவரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள  நிலையில், இப்படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தன் படக்குழுவினருடன் புரமோசனில் கலந்துகொண்ட  நடிகர் சிரஞ்சீவி, தயாரிப்பாளர் தில்ராஜூ, வாரிசு பட ஆடியோ ரீலீஸின்போது பேசிய அதே பாணியில்  எண்டர்டெயின்மென்ட் வேணுமா இருக்கு…ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு…டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு…காமெடி வேணுமா காமெடி இருக்கு… சென்டிமென்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு என்று கிண்டலடித்தார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.