1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (10:29 IST)

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ என்ற திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி சற்றுமுன்அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு தெலுங்கானா ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் தற்போது திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படம் ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பதும் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.