1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (17:29 IST)

சிகிச்சையில் குணமாகி வந்த சாய் தரம் தேஜ்… குடும்பத்துடன் கொண்டாடிய சிரஞ்சீவி!

சாய் தரம் தேஜ் இரண்டு மாத சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

சிரஞ்சீவியின் சகோதரி மகனும் இளம் நடிகருமான சாய்  தரம் தேஜ், கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் அவருக்கு கண் மற்றும் நெஞ்சு பகுதிகளில் அடிபட்டுள்ளது. ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததால் அவருக்கு தலையில் அடிபடவில்லை. இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த இரு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையில் குணமான தேஜ் இப்போது வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து சிரஞ்சீவி குடும்பத்தினர் இதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.