3000 பாடல்களில் கிடைத்த ரூ.85 லட்சம்: என்ன செய்தார் சின்மயி?
3 ஆயிரம் பாடல்கள் பாடியதில் கிடைத்த ரூபாய் 85 லட்சத்தை அப்படியே கொரோனா நல நிதியாக பாடகி சின்மயி மக்களிடம் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக பரவி வந்த நிலையில் பாடகி சின்மயி தனது டுவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிறந்தநாள் திருமணம் உள்ளிட்ட நாட்களில் வாழ்த்துக்கள் பாடல்கள் வேண்டுமென்றால் நான் பாடி தருகிறேன். அதற்காக எனக்கு நீங்கள் கொடுக்கும் நன்கொடையை நான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப் போகிறேன் என்று கூறியிருந்தார்
இதனை அடுத்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சின்மயியிடம் பாடல்களை கேட்டு வாங்கினார்கள். இவ்வாறு 3000 பாடல்கள் பாடியதில் ரசிகர்கள் கொடுத்த நன்கொடை பணம் மொத்தம் ரூபாய் 85 லட்ச ரூபாய். இந்த பணத்தை அப்படியே கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பாடகி சின்மயி செலுத்தியுள்ளார்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இந்த பணம் உதவியாக இருக்கும் என்றும் இந்த பணியை தான் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது