1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (18:17 IST)

ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தில் இணைந்த அனிருத்: புதிய தகவல்

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டன என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் பத்தாம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த தகவலை ஏற்கனவே படத்தின் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று தொடங்கும் இந்த பாடலை பாடியது அனிருத் என்பது தற்போது தெரியவந்துள்ளது.ஏற்கனவே டி இமான் இசையில் ஒரு சில பாடல்களைப் பாடியுள்ள அனிருத், தற்போது ஜெயம் ரவிக்காக மீண்டும் ஒருமுறை டி இமான் அவர்களுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புதிய வீடியோ புரோமோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, நிதிஅகர்வால், ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது