வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (08:48 IST)

வியாபாரத்துக்காகவே இந்த தலைப்பு… போட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்த சிம்புதேவன்!

இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது யோகி பாபுவை வைத்து போட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒரு படகில் பயணிக்கும் 10 வித்தியாசமான குணாம்சம் கொண்ட மனிதர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நேற்று படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சிம்புதேவன் “இதுவரை நான் 8 படங்களை இயக்கியுள்ளேன். அந்த படங்களைப் போலவே இந்த படமும் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்துக்கு முதலில் ‘பக்கிங்ஹாம் வீரனும் பரதேசியின் பேரனும்” என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். ஆனால் மார்க்கெட்டிங்குக்காக தலைப்பை ஆங்கிலத்தில் வைக்கவேண்டியதாகி விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.