1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:12 IST)

ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை: ‘மாஸ்டர்’ ஷோவை கேன்சல் செய்த திரையரங்கம்!

சென்னையின் முக்கிய திரையரங்கு ஒன்றில் ‘மாஸ்டர்’ படத்திற்கு இன்று மதியம் 12 மணி காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை என்பதால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடி வசூலித்தது என்றும், ரூ 200 கோடி வசூலித்தது எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் மாஸ்டர்’ படத்தின் 12 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்யப்படவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது
 
‘மாஸ்டர்’ படத்தின் வசூல் கோடிக்கணக்கில் என ஒரு பக்கம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி திரையரங்கிலேயே ஒரு டிக்கெட் கூட விற்பனையாகாமல் ஷோ கேன் ஆகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது