1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:19 IST)

சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் தேதி அறிவிப்பு!

film festival
சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் தேதி அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்பதும் அப்போது உலகின் மிகச் சிறந்த திரைப்படங்கள் சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரையிடப் படும் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 வரை நடைபெறும் என்றும் 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran