வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:30 IST)

சென்னை – கோவை இடையே ரயில்கள் ரத்து? முழுவிவரம் உள்ளே!

Train
ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை – கோவை இடையே செயல்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் ஏராளமான வழித்தடங்களில் பல ரயில்கள் இயங்கி வரும் நிலையில் அவ்வபோது பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அவ்வாறாக கோவை – சென்னை இடையே ரயில் சேவைகள் பராமரிப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி,

எழும்பூர் – சேலம் (22153) இடையே இரவு 11.55க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆகிய 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

சேலம் – எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

செண்ட்ரல் – கோவை (12679) இண்டர்சிட்டி, கோவை – சென்னை (12680) இண்டர்சிட்டி இருவழித்தடங்களிலும் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

செண்ட்ரல் – கோவைக்கு (12675) காலை 7.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலும், கோவை – செண்ட்ரல் (12676) மதியம் 3.15க்கு இயக்கப்படும் விரைவு ரயிலும் டிசம்பர் 3ம் தேதி மட்டும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

செண்ட்ரல் – கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243, 12244) இரு வழித்தடங்களிலும் டிசம்பர் 3ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

Edit By Prasanth.K