வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (13:58 IST)

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு: கோப்புக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு கோப்புக்கு எடுக்காததை அடுத்து அந்த மனுவை கோப்புக்கு எடுக்கும்படி சென்னை முதன்மை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய இருந்ததாகவும் ஆனால் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார் 
 
இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தது. ஆனால் இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
 
 இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவு பெற்றுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva