புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:29 IST)

செக்க சிவந்த வானம் படத்தின் மொத்த நேரம், சென்சார் தகவல்..

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய்,  பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா,  அதிதி ராவ் உள்பட பல்வேறு திரைநட்சத்திரங்கள்  நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம், இந்த படம் வரும் செப்டம்பர்  27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
அண்மையில் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் செக்க சிவந்த வானம் படம் திங்கள்கிழமை சென்சாருக்கு சென்றது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முழு அளவு,   2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும்.
 
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.