வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (08:35 IST)

சந்திரமுகி 2 படத்தைப் பார்த்த படக்குழு… மகிழ்ச்சியில் லைகா!

ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தயாரான சென்சார் காப்பியை படக்குழு பார்த்துள்ளதாகவும், படம் திருப்திகரமாக வந்துள்ளதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.