சந்திரமுகி-2 பட முதல் சிங்கில் #Swagathaanjali இன்று ரிலீஸ் !
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது.
சந்திரமுகி 1 பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த நிலையில், 2 ஆம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.
இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள வேட்டையன் கதாபாத்திர லுக்கை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் கங்கனாவின் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, இதன் முதல் சிங்கில் ஸ்வாகதாஞ்சலி என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறி இதன் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.