சந்திரமுகி 2 பட புதிய அப்டேட் அறிவித்த படக்குழு
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது.
சந்திரமுகி 1 பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த நிலையில், 2 ஆம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.
இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள வேட்டையன் கதாபாத்திர லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், கங்கனா கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை ரிலீஸாகவுள்ளது எனப் படக்குழு ஒரு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
இது வைரலாகி வருகிறது.