1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:15 IST)

“சந்திரமுகி 2 படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை…” – இயக்குனர் பி வாசு பகிர்ந்த தகவல்!

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28 ஆம் தேதி என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தாமதம் பற்றி பேசியுள்ள இயக்குனர் பி வாசு “படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை செப்டம்பர் 8 ஆம் தேதி பார்ப்பதாக இருந்தோம். அன்று திடீரென படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை என தகவல் வந்தது. கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் தேடியபின்னர்தான் அந்த ஷாட்கள் கிடைத்தன. இதுதான் ரிலீஸ் தாமதத்துக்கான காரணம்” என தற்போது கூறியுள்ளார்.