திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (07:52 IST)

இன்னும் ஷூட்டிங்கே தொடங்கல… அதுக்குள்ள ரஜினி 171 ரிலீஸ் ப்ளான் போடும் சன் பிக்சர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் படத்தையும் லோகேஷ் லியோ படத்தையும் முடிக்க உள்ளனர். இந்நிலையில் அதற்குள்ளாகவே இந்த படத்தின் ரிலீஸ் ப்ளானை போட ஆரம்பித்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என திட்டம் போட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதற்கேற்றார் போல முன் தயாரிப்புப் பணிகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாம்.