நைஜீரியன் ஹேர்ஸ்டைல் வைத்து கிண்டலுக்குள்ளான கேத்ரின் தெரெசா!

Papiksha Joseph| Last Updated: புதன், 2 செப்டம்பர் 2020 (09:17 IST)

'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார். மெட்ராஸ் படத்திற்கு பிறகு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான 'கலகலப்பு 2' படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.ஆதலால் , தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் தாராளம் காட்டி நடிப்பார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைஜீரியா நாட்டில் உள்ள பெண்கள் போன்று ஹேர்ஸ்டைல் செய்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கும் இந்த போட்டோக்களை ராஜா ராணி படத்தில் வரும் " பிதுங்குன வாயி" கேரக்டர் மாதிரியே இருக்கீங்க என கூறி ட்ரோல் செய்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.


இதில் மேலும் படிக்கவும் :