வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (19:56 IST)

இது காரா - கப்பலா? இவ்ளோ கோடியா?. புதிய கார் வாங்கிய அஜித்..!!

Ajith Car
நடிகர் அஜித் புதிதாக போர்ஷ் கார் வாங்கிய நிலையில், அதன் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
நடிகர்கள் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகள் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  குறிப்பாக நடிகர் அஜித், கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட சிகப்பு நிற கார் ஒன்றை வாங்கிய நிலையில் அதில், அஜித் மின்னல் வேகத்தில் பறக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.
 
ஏற்கனவே நடிகர் அஜித் வீட்டில்  ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் வாங்கிய ஃபெராரியை தொடர்ந்து தற்பொழுது, Porsche GT3RS இணைந்துள்ளது. துபாயில் வாங்கிய இந்த காரின் விலை ரூ. 3.51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

 
நடிகர் அஜித் புதிதாக கார் வாங்கிய போட்டோவை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.