வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (15:40 IST)

நடராஜை வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் விஜயகாந்த் நடராஜை வாழ்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் நடராஜனைப் பாராட்டி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், சர்வதேச போட்டியில் வெற்றி பயனத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இனிவரும் விளையாட்டுப் போட்டில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நடராஜனின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.