வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:12 IST)

கேப்டன் பிரபாகரன் ரிட்டர்ன்ஸ்… கோட் பட சஸ்பென்சை உடைத்த வெங்கட்பிரபு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஏ ஐ மூலமாக விஜயகாந்த் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும் போது அதற்கு சில ரெஃபரன்ஸ்கள் வேண்டும். அதற்கு நாங்கள் கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்தைதான் கொடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.