1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (18:42 IST)

''ஆடியோ லாஞ்ச் -ல் விஜய் அரசியல் பேச வேண்டாமென முடிவா?''- ப்ளூ சட்டை மாறன்

Vijay
வாரிசு பட ஆடியோ லாஞ்ச்-ல்  அரசியல் பேச வேண்டாமென முடிவா? புலி பாயுமா? பதுங்குமா?’’என்று  ப்ளூ சட்டை மாறன் டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கையொட்டி துணிவு படத்திற்குப் போ ட்டியாக உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரமாண்டமான  நடக்கும் என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு  ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போதும் நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை மற்றும் அரசியல் சார்ந்து எதாவது பேசுவார். இது சினிமா உலகில் அனல் பரக்கும்.

அந்த வகையில், வாரிசு பட ஆடியோவில் நடிகர் விஜய் சுவாரஸ்யமாக எதாவது பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து  சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ வாரிசு இசை வெளியீடு 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

பட்டாசுக்கடை, பூக்கடை போன்ற அதிரடி அரசியல் பஞ்ச் பேசுவாரா அல்லது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்முவரா?

ரெய்டிற்கு பிறகு.. ஆடியோ லாஞ்ச் அரசியல் பேச வேண்டாமென முடிவா? புலி பாயுமா? பதுங்குமா?’’என்று பதிவிட்டுள்ளார்.