1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (00:28 IST)

தானைத்தளபதி…ஒரு படம் பண்ணிரலாமா – பிரபல இயக்குநர் டுவீட்

சிம்பு பட தயாரிப்பாளரிடம் நாம் இணைந்து ஒரு படம் பண்ணிரலாம் என இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.  இப்படபிடிப்பு வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

எனவே நடிகரும் இயக்குநருமான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், @sureshkamatchi  எங்கள் அண்ணன், தானைத்தளபதி , வருங்கால......

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரதர்...  'மாநாடு' முடிந்தபின் 'பதவியேற்பு'...

இந்த தலைப்புல ஒரு படம் பண்ணிரலாமா...எனக் கேட்டுள்ளார்.