கம்மல் மூலமும் காதலை வெளிப்படுத்தலாம்: நயன்தாரா!

Sasikala| Last Modified வியாழன், 5 ஜனவரி 2017 (10:10 IST)
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து  விட்ட நிலையில், விக்னேஷ் அம்மாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 
இதனை தொடர்ந்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அவர்கள் கடந்த ஆண்டே கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.  இந்நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய பிரபலங்களும் தங்களின் காதலரின் பெயரை குறிக்கும் வகையில்  எழுத்து வடிவ கம்மல் அணிந்து காதலை வெளிப்படுத்துகிறார்கள்.
 
அதே போல் நயனும் தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி என்ற எழுத்தில் கம்மல் செய்து  போட்டுள்ளார். நயன்தாரா தற்போது எல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :