செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (15:30 IST)

கொரோனா வைரஸில் இருந்து மீண்டுவிட்டேன் - மிகுந்த மகிழ்ச்சியில் பிரித்விராஜ் பதிவு!

கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த திரைத்துறையினரும் வீட்டில் இருந்து வருகின்றனர். . ஆனால், மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக     58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டார் .

இதையடுத்து அவரது மனைவி கணவரின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்திருந்தார். அவ்வப்போது கணவரை பிரிந்து உருக்கமான பதிவுகளை போட அவருக்கு ஆறுதலான வார்த்தைக்கூறி அனைவரும் சமாதானம் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அவரது மனைவி சுப்ரியா மேனன் தனது கணவர் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டதாக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

பின்னர் அம்மானில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் வந்திறங்கிய நடிகர் பிரித்விராஜ் கொச்சியில் உள்ள குவாரன்டைன் மையத்தில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் இன்றுடன் அவரது சோதனை காலம் முடிந்து அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்டில் நெகடீக் என வந்திருக்கிறது என மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.