ஜீ.வி.பிரகாஷின் புரூஸ்லீயை குடும்பமாக ரசிக்கலாம்
விடலை கதைகளுக்கு பல்லி போல் பச்ச்சக்கென்று பொருந்துகிறார் ஜீ.வி.பிரகாஷ். அதனால் அவரது படங்கள் பெரிய அளவில் பாக்கெட்டை பதம் பார்ப்பதில்லை.
ஜீ.வி.நடிப்பில் அடுத்து வெளியாகும் படம், புரூஸ்லீ. ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு புரூஸ்லீ பைரவாவுடன் மோதுகிறது.
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்துள்ளனர். ஆக, 30 சதவீத வரிச்சலுகையுடன் புரூஸ்லீ வருகிறார்.